• Title One

    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam.
  • Title Two

    Tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo.
  • Title Three

    Quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse.
  • Title Four

    Consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.

Wednesday, August 28, 2013

அப்படியா? கியூபா சோர்ந்து விட்டதா?

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றடைந்தபின், அங்கிருந்து மறுநாளே கியூபா ஊடாக வெனிசூலா செல்வதற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானத்தில் அவர் செல்லவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.ரஷ்ய விமான சேவை ஏரோஃபுளோட், ஸ்னோடனை ஏற்றிக்கொண்டு கியூபா தலைநகர் ஹவானாவுக்கு வந்தால், அந்த விமானத்தை இறங்க அனுமதிப்பதில்லை என கியூபா முடிவு செய்திருந்தது.

இந்த விஷயம், ரஷ்ய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்படவே (ரஷ்யாவும், கியூபாவும் கூட்டாளிகள்), கடைசி நிமிடத்தில் அந்த விமானத்தில் ஏற வேண்டாம் என ஸ்னோடன் அறிவுறுத்தப்பட்டார் என்பதே தற்போது தெரியவந்துள்ள விஷயம்.

ரஷ்ய மீடியாக்களில் இந்த தகவல் நேற்றிரவு வெளியானது. அதற்கு ரஷ்யாவோ, கியூபாவோ மறுப்பு ஏதும் (இதுவரை) தெரிவிக்கவில்லை.

சரி. கியூபா எதற்காக இப்படி ஒரு முடிவுக்கு வந்தது? அமெரிக்க அழுத்தம் காரணமாகவா? 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்துள்ள கியூபாவுக்கு அமெரிக்காவால் அழுத்தம் கொடுத்திருக்க முடியுமா? அப்படி கொடுக்க வேண்டுமானால், அது, எவ்வளவு பெரிய அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்?

ஊகும். ஸ்னோடனை ஏற்றிக்கொண்டு கியூபா தலைநகர் ஹவானாவுக்கு ரஷ்ய விமானம் வந்தால், விமானத்தை தரையிறங்க அனுமதிப்பதில்லை என கியூபா முடிவு செய்வதற்கு வேறு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும்! அல்லது இந்த கதையே தற்போது ‘ஏதோ’ காரணத்துக்காக ரஷ்ய மீடியாக்களால் இட்டுக் கட்டப்பட்ட கதையாக இருக்க வேண்டும்.

பாப்போம், எது ஜெயிக்குதுன்னு, பெட்ரோல் முதல்ல 100 ரூபாய் ஆகுதா இல்ல டாலர் 100 ரூபாய் ஆகுதானு...

டெல்லி: பாராளுமன்றக் கூட்டத் தொடருக்குப் பின் டீசல் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது. சமையல் கேஸ் விலையையும் இனி மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ 10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வரலாறு காணாத சரிவு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று ரூ 66 ஆக இருந்தது இன்று 68 ஐத் தொட்டுவிட்டது.
நிதிப் பற்றாக்குறை ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தையும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது.

வீழ்ச்சியைத் தடுப்பார்களா...ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். முதல் கட்டமாக, பல புதிய முதலீடுகளை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. மேலும் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியைக் குறைக்க... ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் உள்நாட்டு இறக்குமதி அதிகரிப்புதான். இதனைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என அரசு அறிவித்து பல்வேறு புதிய வரிகளை விதிக்க ஆரம்பித்துள்ளது. இருந்தாலும் ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வரவில்லை.
எரிபொருள் விலை உயர்வு நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நிதிப்பற்றாக்குறை ஆகிய முப்பெரும் பாதிப்பிலிருந்து நாட்டை ஓரளவாவது மீட்பதற்கு உடனடி வழி, பெட்ரோலிய பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்துவதுதான் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரில் அந்த வகையில், முதலில் பெட்ரோலிய பொருட்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகிற டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அது பரிசீலித்து வருகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 6-ந் தேதி முடிகிறது. அதற்கு பின்னர் இதுகுறித்து மத்திய அரசு முடிவு எடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

எரிவாயு விலை சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.10 உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குருவியை பாய்ந்து பிடித்த போலீஸ்!...

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் கொண்டு வந்த குருவியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவு பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்'' கருவியில் பயணி ஒருவரின் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட ஆசாமியிடம் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. பொன்ராம், இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அந்த மர்ம நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். 

அங்கு கிடைக்கும் சம்பளம் தனது செலவுக்கு போதவில்லை என தனது நண்பர் சலீம் என்பவரிடம் கூறியுள்ளார். அவர் அதிக வருமானம் வரும் வழியை உனக்கு சொல்லித் தருகிறேன். நீ கஷ்டப்பட தேவையில்லை. ஒரு பையை தருவேன் அதை பாலக்காட்டிற்கு கொண்டு சென்றால் அங்கு வந்து ஒருவர் பையை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார். சலீம் கூறியபடி பணத்துக்கு ஆசைப்பட்டு சையது இந்த வேலையை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். 

அவர்களது திட்டத்தின்படி பையை கொண்டு வந்த போது ரெயில் நிலையத்தில் சிக்கி கொண்டார். அந்த பயணி கொண்டுவந்த பையில் 30 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணம் யாருடையது? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்திற்கு வரிசெலுத்தாமல் மோசடி செய்த ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஹவாலா பணம் இருக்குமானால் இந்த வழக்கு வருமானவரித்துறைக்கு மாற்றப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Tuesday, August 27, 2013

அண்டப் புளுகன் அமெரிக்காவின் புளுகு மூட்டைகள்

லாஸ் ஏஞ்சலெஸ்: சர்வாதிகாரி என்றாலே எல்லாமே முரட்டுத்தனமாகத்தான் இருக்கும் போல. ஜெர்மனியை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தனது செக்ஸ் ஆசையைக் கூட்டுவதற்காக எக்குத்தப்பான காரியங்களைச் செய்து வந்தாராம். எலி விஷத்தை சாப்பிட்டுள்ளார். அவர் செய்த காரியங்களைப் பார்க்கும்போது. இதுகுறித்து ஒரு டிவி டாக்குமென்டரிப் படத்தில் தெரிவித்துள்ளனர். அதிலிருந்து சில....

ஹிட்லருக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அவருக்கு பர்கின்சன் நோய் இருந்துள்ளது. மன அழுத்தம் இருந்துள்ளது. அவரது விதைப் பை சரியாக இல்லை. செக்ஸ் ஆசையும் குறைவாகவே இருந்துள்ளது

அவருக்கே தனது மனதும், உடம்பும், செக்ஸ் ஆசையும் தன்னை விட்டு நழுவிப் போய் வருவது தெரிந்துள்ளது. இதனால் அவற்றை சரி செய்ய பல உபாயங்களைக் கடைப்பிடித்துள்ளார்.

இதற்காக கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். ஆம்பிடமைன் ஹார்மோன் மருந்தை பயன்படுத்தியுள்ளார்.

அவருக்கு டாக்டராக இருந்தவர் தியோடர் மோரல். ஆனால் இவரை பலர் போலி டாக்டர் என்றும் கூறுகிறார்கள். இவர் ஆலோசனைப்படிதான் பல மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார் ஹிட்லர்.

ஹிட்லருக்கு ஒரு நாளைக்கு 80 மருந்துகள் கொடுக்கப்பட்டனவாம். டானிக், அது, இது என்று மனிதர் மருந்திலேயே மூழ்கியிருந்துள்ளார்.

அதேபோல எலி விஷத்தையும் கசாயம் போல குடித்துள்ளார். இதற்குக் காரணம் செக்ஸ் ஆசையைக் கூட்ட வேணடும் என்பதற்காகவாம். அதேபோல பற்களைக சுத்தம் செய்ய எண்ணெயையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் ஹிட்லர் தனது இளம் மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பல்வேறு ஊசிகளையும் போட்டு வந்துள்ளார். இதையும் தியோடர்தான் போட்டாராம்.

அதேபோல தினசரி தனது இளம் மனைவி ஈவா பிரவுனுடன் படுக்கை அறைக்குள் செல்வதற்கு முன்பு லிபிடோவைக் கூட்டுவதற்காக ஒரு ஊசி போட்டுக் கொள்வாராம் ஹிட்லர்.

இந்த ஊசி மருந்துகள்தான் ஹிட்லரை முரட்டுத்தனமான, வெறிபிடித்த மனிதராக மாற்றி பல ஆயிரம் யூதர்களைக் கொல்லக் காரணம் என்றும் பலர் சொல்கிறார்கள். பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளும் கூட இப்படித்தான் பெரிதாக இருக்கும் போல...!

Saturday, August 24, 2013

அப்படியா!.....சுகந்திரம் அடைந்து விட்டோமா?

முடியாட்சியை ஒழித்து உருவானது தான் குடியரசு. குடியரசு தினத்தை கொண்டாட அழைக்கப்பட்டிருக்கும் நாம் இந்தியக் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதை விட, இந்திய முட்டாள்கள் என்பதில் சிறுமைப்படுத்தப்படுவதிலே தான் பெருமிதம் கொள்கிறோம்! ஆம் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, நம் தாய் தமிழகத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்தியக் குடியரசு முழுமையையும் ஆராய்ந்து பார்த்தொமானாலும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். எப்படி? இங்கே கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி -கனிமொழி-தயாநிதி-உதயநிதி-பேரன் பேத்திகள்..., கர்நாடகத்திலே தேவகௌடா-குமாரசாமி, ஆந்திரத்திலே, ஒரிசாவிலே என் அடுக்கிக்கொண்டே போகலாம். இறுதியிலே மத்தியில் பார்வையை திருப்பினால் வருத்தங்களே மிஞ்சும்.முடியரசை ஒழித்தோம் இந்தியாவை இணைத்தோம் என மார்தட்டும் காங்கிரசு கட்சிக்கு நேரு குடும்பத்தை விட்டால் வேறு ஆட்களே இல்லை தலைமைப் பதவியேற்பதற்கு என்பது கேவலமாகத் தெரியவில்லை. இப்போது சொல்லுங்கள் இது குடியரசா இல்லை முடியரசா? சற்று ஆழ ஊன்றி சிந்தித்தோமானால் பிரித்தாளும் கொள்கையால் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயக் கொள்கைகளைத் தான் இன்றைக்கு நமது தேசத்தின் கட்சிகளும் பின்பற்றி, நம்மை கோமாளிகளாக்கி வருகின்றது எனும் உண்மை புலப்படும்.
நோயுற்றவனுக்கு உதவி புரிகிறது கலைஞர் காப்பீட்டு திட்டம் என பிதற்றுபவனுக்கு புரிவதில்லை அந்த திட்டத்திற்கான மதிப்பீடு டாஸ்மாக்கின் ஒரு சில நாள் வருமானம்தான் என்பது. மூளையை அடகு வைத்த நம் இனத்திற்கு, மொழிக்கு, நாட்டிற்கு தேவை விழிப்புணர்வு. அது எங்கனம் கிடைக்கும்? நம் பண்பாட்டின் வழி, தன் தாய் மொழியின் வழியே அன்றி வேறு வழியிலில்லை.
ஒவ்வொருவனும் தன் தாய் மொழியையும், தனது கலாசாரத்தின் உண்மையான சாராம்சத்தையும் உணராமல் பெறும் வளர்ச்சி உண்மையான வளர்ச்சியாகாது. கொண்டாட்டங்களும் அது போலத்தான், செம்மறி ஆட்டுமந்தைகளைப் போல அல்லாமல் பகுத்தறியும் மனிதனாக சிந்தித்து சரியான மாற்றங்களை ஆதரித்து, தவறான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பதிலேதான் நம் மனித வாழ்வு இருக்கிறது. "பார்வையாளன் பங்கேற்பாளனாவதில்லை" என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களில் பங்கேற்க முயலுவோம் அல்லது துணைபுரிவோம். உண்மையான குடியரசு கொண்டாட்டங்களில் இல்லை. நல்ல குடியாட்சியில் வாழ்வதில் தான் உள்ளது

நான் புரட்சி கலைஞரல்ல: கேப்டன் அதிரடி

 “நான் இப்போது சினிமாக்காரன் இல்லவே இல்லை.. நான் ஒரு அரசியல்வாதி, எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை” என்று கருத்து தெரிவித்து, சினிமா பிரச்னையில் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களை மிரள வைத்துள்ளார் விஜயகாந்த்.
      விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘தலைவா’ படம், சமீப நாட்களில் பலத்த சர்ச்சையில் சிக்கியிருந்தது. அதன் பின்னணியில் அரசியல் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன்பின் விஜய் தரப்பினர், “அவருக்கு அந்த (அரசியல்) ‘தலைவா’ ஆகும் ஐடியா ஏதும் இல்லிங்க.. வெறும் பயாஸ்கோப் ‘தலைவா’ மட்டும்தான்” என்று கூறியதையடுத்து ஓவர் நைட்டில் எல்லாமே செட்டில் செய்யப்பட்டதாகவும் மீடியாக்களில் செய்தி வெளியானது.
      இதையடுத்து, சினிமா உலகில் இருந்து வந்து அரசியலில் நிஜமாகவே ‘தலைவா’ ஆகியுள்ள விஜயகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோதே, அவர் “எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை” என்று தெரிவித்தார்.
      திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, “விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன்” என்றார்.
   ஐயையோ...